இது காதல் என்ற மெல்லிய இழையால் பின்னப்பட்ட நாவல். அதையும் தாண்டி ஒரு பெண்ணின் போராட்டத்தை மையப்படுத்தியும் எழுதப்பட்டுள்ளது.
பெண்கள் நாட்டின் கண்கள் என்று போற்றப்படும் காலகட்டங்களில் பெண்களின் பங்கு எல்லாத்துறைகளிலும் வியாபித்திருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயமாக இருந்தாலும் இன்னும் சில துறைகளில் அதற்குரிய முழுமையான அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பது தான் உண்மை. அப்படிப்பட்டதான ஒரு சம்பவத்தை மையமாக கொண்டு அதாவது கதாநாயகியின் போராட்டத்தை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்டதுதான் இந்த நாவல்.