தாயின் தாலாட்டிலே பிறந்ததுதான் முதல் குழந்தைப் பாடல். தாலாட்டுப் பாடலிலே இல்லாதது எதுவுமில்லை. ஆனால் இன்றைக்கு செல்போன்களே குழந்தைகளைத் தாலாட்டுகின்றன.
குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டியதைப் பாடல் மூலம் சொன்னால் உடனே அது அவர்கள் மனத்தில் பதியும் என்பதால்தான் குழந்தை இலக்கியம் எழுதிய வந்த மூத்த எழுத்தாளர்கள் பலரும் குழந்தைகளுக்கு பாடல்கள் மூலமே நிறைய படைப்புக்களைத் தந்து சென்றனர். தந்தும் வருகின்றனர்.
நானும் குழந்தைகளுக்காக இந்த பாடல்களை தந்துள்ளேன்.