பெற்றோர் என்றால் ஈசன் தருவதை பெற்றுக் கொண்டவர்கள் என்று பொருள். பெற்றோருக்கு ஈசனால் அருளப்பட்ட குழந்தைகளை, ஆசைகளின் அடைமொழியாகவே இன்று பெற்றோர்கள் உணர்வது வருந்தத்தக்கது.
சின்ன வயதிலேயே அவர்கள் கேட்கும் கேள்விகளை மதித்தும் சிந்தித்தும் பதில் தரும் பெற்றோர்களே கைவிளக்காகின்றனர். அது எப்படிப்பட்ட சின்னஞ்சிறிய கேள்வியென்றாலும் பெற்றோர்கள் அதற்கு விடை தேட வேண்டும்.
"சோப்புக்குமிழி ஏன் வெடிக்குது?", "ஆகாயம் ஏன் விழலை?", "சாருவுக்கு தாத்தா சொன்ன குட்டி குட்டிக்கதைகள்" சில குணங்களை குழந்தைகளிடம் சேர்க்க விரும்பி எழுதப்பட்டதே இந்நூல்.