குமுதம் குழுமத்தின் முக்கியமான தூணாகச் சுழன்றவரும், அதன் பல இதழ்களுக்கு ஆசிரியரும், என் நண்பருமான அமரர் ப்ரியா கல்யாணராமன் சிந்தனையில் தோன்றிய புதுமையான யோசனைதான் இந்த 'நீ?' தொடர். "பிகேபி சார், ஒருபக்கத் தொடர்கதை எழுத இயலுமா?" என்றார் யோசனையே வசீகரித்தது. உடனே சம்மதித்தேன்.
ஒரு தொடர்கதையின் சுவாரஸ்யம் குறையாமல் அதே விறுவிறுப்புடன் ஒரு பக்க அத்தியாயத்தில் மினியேச்சராக வழங்குவது சவாலாகத்தான் இருந்தது. தலைப்பும் ஓரெழுத்தில் தேவை என்றார். 'நீ?' என்றேன். அந்த 'நீ?' இப்போது புத்தக வடிவிலும், மின்புத்தகமாகவும் உங்கள் கரங்களில்.