மாயோன் திருப்புகழோட முதல் வாழ்க்கை ஆரம்பித்த வேகத்திலேயே முடிந்து போக, அவனோட இரண்டாவது திருமணமும் அவன் வெறுக்கும் ஒரு பொண்ணோட நடந்தால் என்னவாகும்? ஸ்ரீமதியோ மாயோனை மாய்ந்து மாய்ந்து சைட் அடிச்சு இருக்க, அவனுக்கு தன்னைப் பிடிக்கவே செய்யாது என்ற உண்மை அவளை எந்த அளவுக்கு பாதிக்கும்? அப்படியும் அவனையே கல்யாணம் செய்துகொள்ள வேண்டிய சூழல், அதனால் உருவாகும் பிரச்சனைகள்... இவங்களுக்குள்ளே எல்லாம் சரியாகுமா? இல்லையென்றால் பிரிந்து செல்வார்களா?
ஸ்ரீமதியின் முதல் திருமணம், அதனால் வரும் பிரச்சனைகள்... அதையெல்லாம் கடந்துவர மாயோன் உதவி செய்தானா? இல்லையென்றால் அவள்மீது கொண்ட வெறுப்பால் அவளைக் கண்டுகொள்ளாமல் விட்டானா? விடை அறிய கதைக்குள் பயணியுங்கள். கதையில் புதுமையில்லை என்றாலும் அதைச் சொன்ன விதம் உங்களுக்குப் பிடிக்கும் என எண்ணுகிறேன்.