Error loading page.
Try refreshing the page. If that doesn't work, there may be a network issue, and you can use our self test page to see what's preventing the page from loading.
Learn more about possible network issues or contact support for more help.

Vaanga Thambi Thangaiyare

ebook
1 of 1 copy available
1 of 1 copy available

நல்ல விஷயங்களை அப்படியே சொன்னால் அதை ஏற்பதற்குப் பொதுவாக மனம் விரும்புவதில்லை. காரணம் அவ்வாறு சொல்பவர் தம் அதிகாரத்தை நிலைநாட்டுகிறாரோ, அதற்கு நாம் பணிய வேண்டுமோ என்று கேட்பவர் நினைத்துவிடுவதுதான். அதோடு தான் அறிவுரை சொல்லப்படும் அளவுக்கு நடந்துகொண்டுவிட்ட குற்ற உணர்வும் அந்த அறிவுரைகளை ஏற்க மறுக்கும். தானே அதுகுறித்து மனசுக்குள் வருந்திக் கொண்டிருக்கும்போது, அதை மேலும் கிளறும் வகையாகத்தான் அந்த அறிவுரையை நினைக்கத் தோன்றும்.

உடலுக்கு நல்லது செய்யும் அல்லது உடல் நோயை விலக்க உதவும் மருந்தை அதன் கசப்பு சுவை தெரியாதபடி கேப்ஸ்யூலுக்கு அடைத்துத் தருவது போலதான் நல்ல விஷயங்களைச் சொல்ல வேண்டியதும்.

பள்ளிக்கூடத்தில் குறிப்பிட்ட ஆசிரியரை மாணவர்களுக்குப் பிடிப்பதும் அவருடைய வகுப்பு என்றால் தவறாமல் ஆஜராவதும் அவர் இயல்பாகப் பாடம் நடத்தும் முறையால்தான். கணிதப் பாடத்தைக்கூட வெறும் சூத்திரங்களையும், வட்ட, சதுர, முக்கோண படங்களையும் வைத்துச் சொல்லாமல், கதைப்போக்கில் நடத்தக்கூடிய ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மனதில் ஒரு கருத்து நிலைக்க வேண்டுமானால் அதன் தொடர்பான ஏதாவது மனித உணர்வுடன் கூடிய சம்பவத்தோடு தொடர்புபடுத்திதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஏதேனும் ஒரு முகவரியை ஒருவர் கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அவர் குறிப்பிடும் கடை அல்லது வீடு அல்லது அலுவலகத்திற்கு அருகே உள்ள கோயிலையோ, சினிமா தியேட்டரையோ, பிரபலமான கடையையோ குறிப்பிட்டு அந்த முகவரியை நாம் சொல்கிறோமே அதுபோலதான். நேரடியாக அந்த முகவரியை மட்டும் சொல்லிவிட்டு அமைந்துவிடுவோமானால், அதைத் தேடிச் செல்பவர் கூடுதல் அடையாளத் தகவல் எதுவும் இல்லாததால் தேடித் தேடிக் களைத்துவிடவும் கூடும்.

உதாரணங்களுடன் சொல்லப்படும் பாடப் பகுதிகள் போல, அடையாளங்களுடன் சொல்லப்படும் முகவரி போல, கதைகளுடன் சொல்லப்படும் நன்னெறி ஒழுக்கங்கள் விரைவில் அனைவராலும் புரிந்துகொள்ளப்படும் என்றே இன்றளவும் நம்பப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இந்தப் புத்தகத்தில் 150 குட்டிக்கதைகள் தம்முடன் நல்லொழுக்க அறிவுரைகளைத் தாங்கி வருகின்றன. அதே கதைகள் அல்லது அனுபவங்கள் நம் வாழ்விலும் நடைபெற வேண்டும், அப்போதுதான் அந்த அறிவுரையைத் தம்மால் மேற்கொள்ள இயலும் என்று, இந்த புத்தகத்தைப் படிப்பவர்கள் காத்திருக்க வேண்டாம். இது ஒரு 'கோடி காட்டுதல்'தான்; இதே போன்ற ஆனால் வேறுவகையான சந்தர்ப்பங்கள் வரும்போது அதற்கேற்றார்போல நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்வதுதான்.

Formats

  • OverDrive Read
  • EPUB ebook

Languages

  • Tamil

Loading