மாணவர் தேவைக்கு வேண்டியவாறு ஒளியிழைகளாகவும், சிறுவர் பாடல்களாகவும் ஆக்கம் பெற்ற எனது படைப்புகள் அனைத்தையும் 'பாடி ஆடு பாப்பா' என்னும் பெயரில் ஒரு வெளியீடாக இங்கு உங்கள் முன் வைத்துள்ளேன். இதில் தமிழ்மலர் பாடல்கள், பாடியாடு பாப்பா, ஆடலும் பாடலும், தங்கக்கலசம், பாச்செண்டு என்ற பெயர்களுடன் முன்பு வெளிவந்த சிறுவர் பாடல்களையும், வெளிவராத புதிய பாடல்களையும் உள்ளடக்கியதாக இப் 'பாடி ஆடு பாப்பா' தொடுக்கப்பட்டுள்ளது.
இச்சிறுவர் பாடலின் முதற்பகுதியாக அமைந்த 'பாப்பாப் பா' என்ற பகுதி புதிய பாடல்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. இங்கே சில உயர் பண்புகளை உணர்த்தும் கதைப்பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.