நீண்ட நாட்களக அறிவுரைகள் சொல்வதான நூல் எழுத வேண்டுமென்கிற உந்துதல் இருந்து வந்தது. அறிவுரைகளை கடைப்பிடிப்பது மட்டுமல்ல, சொல்வது கூட கடினம்தான் என்று உணரவந்தது.
இந்நூலில் ஏறக்குறைய 1000 அறிவுரைகள் சொல்லப்பட்டுள்ளன. ஏதாவதொரு அறிவுரை யாருக்கேணும் 'டர்னிங் பாயிண்ட்'டாக ஆகிறது என்றாலே எனக்கு மகிழ்ச்சிதான். 'நல்ல புத்தகங்கள் மனிதனைச் செதுக்குவன' என்பர் அறிஞர். இந்நூல் அந்த அரிய பணியை செய்ய முனைந்திருக்கிறது.