2000 ம் வருடம் நடந்த உண்மை கதை
அன்பான குடும்பம் அதில் உறவுகளின் காதல் நுழைந்து விரிசல் ஏற்படுத்துகிறது. குடும்ப உறவுகள் அவளுக்கு அன்னியமாய் போக அக்காவின் கணவனின் வக்கிரப்பார்வைகளை சுமந்தபடியே அவள். எதிர்கால வாழ்விற்கென காத்திருக்கச் சொல்லி கடல் கடந்து சென்ற காதலனுக்காக காத்திருக்கிறாள்.
அதன் நடுவில் நண்பன் என்னும் பெயரில் ஒரு நச்சுப்பாம்பு. விஷம் என்று அறியாமலேயே அவ்வுறவில் தன்னை இழக்கிறாள். பின் காற்றில் கலந்து சுயம் தொலைக்கிறாள்.