அன்பு முத்தங்கள். உங்களுக்காக இதுவரை நான் இருபத்து ஐந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளேன். இவற்றில் சுமார் பத்து சிறுகதைத் தொகுப்புகளும் அடங்கும். சமீபத்தில் "பண்பை வளர்க்கும் சிறுவர் கதைகள்" எனும் இந்த நீதிக்கதை நூலை எழுதியுள்ளேன். சிறுவர் சிறுமியர்களாகிய உங்களுக்கு கதை எழுதுவது என்பது எனக்கு மகிழ்ச்சி தரும் ஒரு விஷயம். உங்களுக்காக கதை எழுதும்போது நானும் ஒரு சிறுவனாகிவிடுகிறேன் என்பது உண்மை.
எதிர்கால இந்தியா உங்கள் கைகளில் இருக்கிறது. இத்தகைய நீதிக்கதைகளை நீங்கள் படித்து அவற்றில் உள்ள கருத்துக்களை உங்கள் மனதில் பதித்து எதிர்காலத்தில் நல்ல மனிதர்களாக ஒரு பண்புள்ள வாழ்க்கையை வாழ வேண்டும்.